திருநெல்வேலியில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
பொதுமக்களிடமிருந்து, ஒரேநாளில் 53 மனுக்களை பெற்ற, உயர் அதிகாரிகள்! திருநெல்வேலி,அக்.11:- தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) உத்தரவுபடி, அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினரால், புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், பாள்யங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், இன்று (அக்டோபர்.11) காலையில், மாநகர காவல் துணை ஆண்யாளர்கள் நெல்லை மேற்கு கே. சரவணக்குமார் மற்றும் தலைமையிடம் ஜி.எஸ்.அனிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டன. "அவற்றின் மீது, உரிய விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள், நியாயமான முறையில் எடுக்கப்படும்!" என்று, துணை ஆணையாளர்கள் இருவரும், மனுதாரர்களிடம் உறுதி அளித்தனர். இதுபோல, பாளையங்கோட்டை, சமாதானபுரம் மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 24 மனுக்களை பெற்ற, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன், "பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும்!"என்று கூறினார். கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த, 44 மனுக்களும், இக்கூட்டத்தில் முடித்து வைக்கப்பட்டன
Comments:
Leave a Reply