டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க மறுக்கும் ஆளுநர்.. பின்னணியில் இந்த காரணமா?
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய கோரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பது ஏன் தெரியுமா
தமிழக அரசு தேர்வாணையம்.. டிஎன்பிஎஸ்சி இந்த ஆணையத்தின் மூலம்தான் பெரும்பாலான அரசு பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுகின்றன. வருவாய் கோட்டாட்சியர் பணி முதல் அலுவலக உதவியாளர் வரை தேர்வு நடத்தி நியமனம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த டிஎன்பிஎஸ்சி தலைவர், 13 உறுப்பினர்களை கொண்ட ஒரு தேர்வாணையம் ஆகும். இந்த தேர்வாணையத்தில் தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. அது போல் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அந்த 3 உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் (ஓய்வு) ஐஏஎஸ் பொறுப்புத் தலைவராக வகித்து வருவதால் 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவையும் 10 உறுப்பினர்களையும் நியமனம் செய்து அதற்கான பரிந்துரையை தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியிருந்தது. இதை ஒரு மாதமாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென இந்த கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. நியமன அறிவிப்பை எப்படி வெளியிட்டீர்கள் என கேட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்
அப்படி வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என ஆளுநர் கூறியிருந்தார். டிஎன்பிஎஸ் தலைவர் நியமனம் தொடர்பாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டதாக என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி , டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களையும் கேட்டிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு பரிந்துரைத்தும் சைலேந்திர பாபு நியமனத்தை ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது டிஎன்பிஎஸ்சி தலைவரின் வயது வரம்பு என்பது 62 வயதாகும். ஆனால் சைலேந்திர பாபுவுக்கு தற்போது 61 வயது 2 மாதங்கள் ஆகியுள்ளன. எனவே டிஎன்பிஎஸ்சி தலைவராக அவரை நியமித்தால் அவரது பணிக்காலம் 10 மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே மீண்டும் அந்த பதவிக்கு தலைவரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நியமிக்கும் போதே 62 வயதுக்கு குறைந்த ஒருவரை நியமிக்குமாறு ஆளுநர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Comments:
Leave a Reply