Thursday, December 26
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி மாவட்டம், க.நவ்வலடி கிராமத்தில்,  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற, கிராம சபை கூட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், க.நவ்வலடி கிராமத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற, கிராம சபை கூட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், க.நவ்வலடி கிராமத்தில்,  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற, கிராம சபை கூட்டம்! திருநெல்வேலி,அக்.2:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், க.நவ்வலடி ஊராட்சியில்,  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (அக்டோபர்.2) காலையில், கிராம சபை கூட்டம் நடைபெற்றது... கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவி ராதிகா சரவணகுமார், தலைமை வகித்தார். "சிறப்பு" அழைப்பாளராக, திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் கலந்து கொண்டு, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து, க. நவ்வலடி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு பணிகள் குறித்து, விரிவாகவும், விளக்கமாகவும் பேசினார். "நீரோ- 65" திட்டத்தின் மூலம், க.நவ்வலடி ஊராட்சியில், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அவர் பேசினார். கடந்த  2022-23  நிதியாண்டில் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட, மேம்பாட்டு பணிகள் மற்றும் நடப்பு 2023-24 நிதி ஆண்டில் நிறைவேற்றப்படவுள்ள, வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின்  போது, "தமிழக முதலமைச்சர்" மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி, "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" துவங்கப்பட்டதற்காக, இந்த  கூட்டத்தில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, "சிறப்பு தீர்மானம்" நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி  மக்களின் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக, அனைத்து துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டன. அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும், வழிவகைகள் செய்யப்பட்டன. கூட்டத்தில், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர்  மி.ஜோசப் பெல்சி, க.புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், மேற்பார்வையாளர் பொன் விஜயராணி ஆகியோருடன்,  சுகாதாரம், வருவாய், பொது விநியோகம், மின்சாரம், சமூக பாதுகாப்பு, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்களும், கலந்து கொண்டனர். தீர்மானங்களையும், விவாதிக்கப்பட்ட வேண்டிய பொருள்களையும், ஊராட்சி செயலர் பிரேமா கோமு, முறைப்படி  வாசித்துக்காட்டி, அனைவருக்கும் நன்றி கூறினார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *