பணிநேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது, அதிரடி நடவடிக்கை! திருநெல்வேலி,ஆகஸ்ட்.27:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருநெல்வேலி பணிநேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது, அதிரடி நடவடிக்கை! திருநெல்வேலி,ஆகஸ்ட்.27:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (ஆகஸ்ட்.27) காலையில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம் திசையன்விளையில் உள்ள, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடிரென ஆரம்ப கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஒரேஒரு செவிலியர் மட்டுமே பணியில் இருந்தார். அவரிடம், உறைவிட மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் இதர பணியாளர்கள் குறித்து, விவரம் கேட்டார். அதற்கு அந்த செவிலியர், தான் மட்டும் உரிய நேரத்தில், பணிக்கு வந்திருபாபதாகவும், தன்னை தவிர வேறு ஒருவரும் பணிக்கு இதுவரையிலும் வரவில்லை! என்று கூறினார்.இந்த பதிலை கேட்ட மாத்திரத்தில் கோபம் அடைந்த அமைச்சர் சுப்பிரமணியன், பணிக்கு வராத உறைவிட மருத்துவர், மருந்தாளுநர் உள்ளிட்ட அனைவர் மீதும், உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, ஆய்வுப்பணியில் தன்னுடன் பங்கேற்ற, மாவட்ட சுகாதார பணிகளுக்கான துணை இழக்குநர் டாக்டர் வி.ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வினை தொடர்ந்து, அங்கு நின்று கொண்டிருந்த நடமாடும் மருத்துவ வாகனத்தை, அமைச்சர் சோதனை செய்தார். அந்த வாகனத்தில் மருந்து, மாத்திரைகள் எதுவும் இல்லாமல் கண்டு, வாகன பொறுப்பாளர் மீதும், வாகன ஓட்டி மீதும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, துணை இயக்குநரிடம் அறிவுறுத்தினார். நாய்க்கடி, பாம்புக்கடி ஆகியவற்றுக்கான மருந்துகள் மற்றும் இதர உயிர்காக்கும் மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்த, அறிவிப்பு பலகைகளை, பொதுமக்களின் கண்களில் படுமாறு வைக்க வேண்டுமென, அமைச்சர் வலியுறுத்தினார். பின்னர் அங்குள்ள பதிவேடுகளை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு, கையெழுத்திட்டார்
Comments:
Leave a Reply