Thursday, December 26
Breaking News:
Breaking News:
விழுப்புரம் மாவட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பு நடைபெற்றது.

16.09.2023 அன்று தேசிய தலைவர்.டாக்டர் பூவை ஜெகன் மூர்த்தியார் ஆணைக்கிணங்க  புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம்  விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தெற்கு ஆற்காடு திருநாவுக்கரசு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மாவட்ட மூர்த்தியார் பேரவை துணைச் செயலாளர் செல்வராஜ்,மாவட்ட இளைஞரணி நிர்வாகி அசோக் குமார் வரவேற்புரை ஆற்றினர்.


 முன்னிலை வகித்தவர் மாவட்ட தலைவர் பூவை ஆறு, வெங்கடேசன்.சுதாகர், கோபிநாத், முருகன், தீபக்ராஜ், கமல், தியாகராஜன், விக்னேஷ்.


மாநில முதன்மை செயலாளர் D.ருசேந்திரகுமார் சிறப்புரை ஆற்றினார், அப்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமை அதிகமாக இருப்பதாகவும்,மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதில்லை எனவும்,பத்திரிக்கையாளர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்க வேண்டும் எனவும்,சுத்தமான குடிநீர் வசதி  இல்லை எனவும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும் அவர் கூறினார்.இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் எடுத்துள்ளார்.


மேலும் மண்டல பொறுப்பாளர்கள் பரணி மாரி, அன்பரசு, தருமன், சகாதேவன், ஜான்சன் ஆம்ஸ்ட்ராங்,  பெரமையன்.ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *