Thursday, November 21
Breaking News:
Breaking News:
அதிகஅளவில் இட்லி,தோசை சாப்பிடுவதினால் வயிற்று குடலில் நல்ல கிருமிகள் உருவாகும்

அதிகஅளவில் இட்லி,தோசை சாப்பிடுவதினால் வயிற்று குடலில் நல்ல கிருமிகள் உருவாகும்

அதிகஅளவில் இட்லி,தோசை சாப்பிடுவதினால் வயிற்று குடலில் நல்ல கிருமிகள் உருவாகும், அசைவ உணவுகளை அதிக அளவில் கொண்டால் வயிற்றில் புற்று நோய் ஏற்படும்  என கோவை சின்னியம்பாளையம் பகுதியில், பிரபல மருத்துவர் விஜி மோகன் பிரசாத்  தெரிவித்துள்ளார், 

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜிஎம் மருத்துவமனை சார்பாக, இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு இன்று  நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாட்டிலிருந்து பிரபல மருத்துவர்கள் பங்கேற்றனர், இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு கிராமப்புற மக்களுக்கு புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு திட்டத்தையும், செரிமான மருத்துவர்களுக்கு உதவும் வகையான மருத்துவ புத்தகத்தை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார் இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் விஜி  மோகன் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்.. 

வெளிநாட்டில் நடக்கும் மருத்துவம் குறித்தும் இந்திய மக்களுக்கு அந்த மருத்துவத்தை ஊக்குக்கு வகையில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் இரப்பை,கல்லீரல், கணையம் போன்ற நோய்களை எவ்வாறு சரி செய்வது குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்பட்டது என்று கூறினார், பின்னர் நாம்  குடிக்கும் தண்ணீர் மூலமாக பல்வேறு நோய்கள் பரவி மக்களை பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் குடிக்கும் நீரையும்,நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கேட்டுக் கொண்டார், தற்பொழுது உடல் பருமன்,சர்க்கரை நோய்,கொலஸ்ட்ரால்,மாரடைப்பு போன்ற நோய்கள் அதிக அளவில் பெருகியுள்ளதாகவும் அதிக அளவில் அசைவ உணவுக் உட்கொண்டால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் எனவும், நமது பாரம்பரியமான இட்லி,தோசை சாப்பிட்டால் வயிற்று குடலில் நல்ல கிருமிகள் உருவாகும் என ஆய்வில் இருப்பதாக தெரிவித்தார் நமது பாரம்பரிய உணவினால் பெரிய நோய்களிலிருந்து தப்பித்து வருவதாக கூறிய அவர், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அது மட்டுமில்லாமல் மனதிற்கு அமைதி கிடைக்கும் என்றும்  கூறினார், ரோட்டரி குளோபல் கிரானைட் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் எலும்பு மற்றும் மூட்டு காயங்களுக்கு ரோட்டரி டவுன் டவுன் துணையுடன் இலவச அறுவை சிகிச்சை செய்து அவர்களை நடக்க வைத்ததாக கூறிய அவர் விஜிஎம் மருத்துவமனையில் ரத்த வங்கி துவங்கி நோயாளிகளுக்கு குறைந்த பணத்தில் ரத்தத்தை வழங்க இருப்பதாகவும் ரத்த வாந்தி எடுக்கும் நோயாளிகளுக்கு விஜிஎம் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார் கிராமப்புற மக்களுக்கு புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை எண்டாஸ்கோப்  மூலமாக அதனை அகற்ற உள்ளதாக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக கூறினார் இந்த நிகழ்ச்சியின் மாநாட்டில், டாக்டர் மதுரா பிரசாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *