Wednesday, October 16
Breaking News:
Breaking News:
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "நடப்போம் நலம் பெறுவோம்" (Health Walk)

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "நடப்போம் நலம் பெறுவோம்" (Health Walk)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்

படி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "நடப்போம் நலம் பெறுவோம்" (Health Walk) திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, 

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கனிராவுத்தர் குளத்தில் தொடங்கி வைத்து பங்கேற்றார்.


ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கனிராவுத்தர் குளத்தில், இன்று (04.11.2023) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" (Health Walk) நடைபயிற்சியினை, ஈரோடு மாநகராட்சி மேயர் திரு.சு.நாகரத்தினம் அவர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி இஆப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 105ன் படி தமிழ்நாடு அரசின் "நடப்போம் நலம் பெறுவோம்" (Health Walk) திட்டத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இன்று (4-11-2023) துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள "நடப்போம் நலம் பெறுவோம்" திட்ட நடைபயிற்சி பாதை கனிராவுத்தர் குளத்தில் இருந்து துவங்கி சின்ன சேமூர் எல்லப்பாளையம் தொட்டம்பட்டி குடிநீர் தொட்டி வரை சென்று திரும்ப கனிராவுத்தர் குளத்தினை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடைப்பயிற்சி பாதையில் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்கள் நிழல் வசதியுடன் கல் இருக்கைகள் குடிநீர் வசதிகளோடு மாநகராட்சி மற்றும் பிற துறையினருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நடைபயிற்சி மேற்கொள்வோரின் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் பிற உடல் உபாதைகள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவ முகாம்கள் மருத்துவக்


குழுவினர்களை கொண்டு நடத்தப்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதற்கான சுகாதார

விழிப்புணர்வும் பொது சுகாதார துறையினரால் வழங்கப்படுவதோடு பொது சுகாதார துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் நடைபயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கும் பல்வேறு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.


மேலும், தினமும் காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் தங்கள் குடும்பத்தினருடன் ”நடப்போம் நலம் பெறுவோம்" திட்ட ஆரோக்கியமான, பாதுகாப்பான நடைபாதையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு அனைவரும் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.


இந்நிகழ்வின்போது, உதவி ஆட்சியர் திரு.வினய்குமார் மீனா இஆப., துணை மேயர் திரு.வே.செல்வராஜ், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வள்ளி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.சோமசுந்தரம், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் திரு.பழனிசாமி (1-ம் மண்டலம்), திரு.சுப்பிரமணி (2-ம் மண்டலம்), திரு.சசிகுமார் (3-ம் மண்டலம்), திரு.குறிஞ்சி.தண்டபாணி (4-ம் மண்டலம்), மாநகர நல அலுலவர் மரு.பிரகாஷ், பல்வேறு தன்னார்வல அமைப்பினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், நடைபயிற்சியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *