கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மற்றும் புதிய கல்பாக்கம் கடலோர பகுதிகளில் நேர்க்கல் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மற்றும் புதிய கல்பாக்கம் கடலோர பகுதிகளில் நேர்க்கல் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலாமேடு மற்றும் புதிய கல்பாக்கம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றங்கள் ஏற்படும் போது கடல் நீர் ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் மீனவர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்ததை அடுத்து கடல் சீற்றத்தை தடுக்கும் வகையில் இரண்டு மீனவர் கிராமங்களிலும் நேர்க்கல் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர், மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்
Tags:
Comments:
Leave a Reply