கனிமொழியிடம் மனு கொடுத்த அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் குடிநீர் பிரச்சனை பற்றி மனு கொடுத்த நிலையில், கட்சி பாகுபாடற்ற நடவடிக்கையால் கவனம் ஈர்த்துள்ளார்.
இதனால் கனிமொழியிடம் மனு கொடுத்த அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர், அவரது வேகத்தையும், கட்சி பாகுபாடில்லாத நடவடிக்கையை கண்டும் திகைத்துப் போனார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்னாங்குறிச்சியில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை மேல ஆத்தூர், மஞ்சள்நீர் காயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து பல்வேறு ஊர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கம், முக்காணி, பழைய காயல் உள்ளிட்ட பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள்நீர் காயல் சுத்திகரிப்பு நிலையம் போலவே, வாழவல்லான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கி ஆண்டு கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் நீர் வழங்க வேண்டுமென, கனிமொழி எம்.பி.யிடம் அதிமுகவைச் சேர்ந்த உமரி காடு ஊராட்சி தலைவர் ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.
அதிமுக ஊராட்சி தலைவர் தானே என்று அலட்சியம் காட்டாமல் மாற்றுக் கட்சியை சேர்ந்தவராக இருப்பினும், அவர் கொடுத்திருப்பது மக்கள் பிரச்சனைக்கான மனு என்பதால் அதன் மீது துரித நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டிய கனிமொழி எம்.பி. உடனடியாக கள ஆய்வு நடத்தினார். புதிய குழாய்கள் ஒரு மாதத்திற்குள் அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த அதிகாரிகள், குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் குழாய்களை மாற்ற ஒரு மாதம் காலம் ஆகும் என்று தெரிவித்தனர். தற்போது குடிநீர் பிரச்சினை தீர சுற்று வட்டார கிராமங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments:
Leave a Reply