Thursday, November 21
Breaking News:
Breaking News:
கரூரில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமையினங்களுக்கு நான்காம் சுற்றாக  கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

கரூரில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமையினங்களுக்கு நான்காம் சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

கரூரில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமையினங்களுக்கு நான்காம் சுற்றாக  கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.


கரூர் மாவட்டம்,  மாநகராட்சிகுட்பட்ட மூலக்காட்டனூர் பகுதியில் இன்று கால்நடை பராமரிப்பித்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமையினங்களுக்கு நான்காம் சுற்றாக  கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல்.  தொடங்கி வைத்தார்கள்.


கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்று 1,72,700 பசு மற்றும் எருமையினங்களுக்கு 75 குழுக்கள் மூலம் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 1,48,533 லட்சம் பசுக்களும், 24,167 எருமைகளும் என மொத்தம் 1,72,700 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணிகள் 07.11.2023 முதல் 27.11.2023 வரை மேற்கொள்ளப்படும், அதேபோல் விடுபட்ட கால்நடைகளுக்கு 28.11.2023 முதல் 21.12.2023 வரை தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும், தடுப்பூசி பணிக்காக 1,73,000 டோஸ் தடுப்பூசிகள், கால்நடை பராமரிப்புத்துறையின் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே கரூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர் தங்களுடைய பசு, எருமை, எருது மற்றும் கன்றுகளும் எவ்வித விடுபாடும் இன்றி முழுமையாக கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தடுப்பூசி கால்நடைகளுக்கு போடப்படுவதால் அடுத்து ஆறு மாதங்களுக்கு கால்நடைகளை கோமாரி நோய் பாதிக்காமல் காப்பாற்றலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மீ.தங்கவேல்.  தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.சாந்தி, துணை இயக்குநர்.மரு..பாஸ்கர்,மாமன்ற உறுப்பினர்.திர,தியாகராஜன் மற்றும் கால்நடை  மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *