Wednesday, January 22
Breaking News:
Breaking News:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 60 அடிகள் பங்கேற்பு, இதில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 60 அடிகள் பங்கேற்பு, இதில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது இந்த கபடி போட்டியில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை, வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம், பர்கூர், அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 40 ஆண்கள் அணியும்,

 20 பெண்கள் அணியும்

கலந்து கொண்டு விளையாடியது   நாக் அவுட் முறையில் இரண்டு நாள்கள் நடைப்பெற்ற இந்த கபடிப்போட்டியில் அரைஇறுதிப்போட்டியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கான இறுதிப்போட்டிகள்

 நடைப்பெற்றது,

இந்த ஆண்களுக்கான இறுதி கபடிப்போட்டியில்

 சூளகிரி அணியும்,

அஞ்செட்டி ஆண்கள் அணியும் விளையாது,

விருவிருப்பாக நடைப்பெற்ற இந்தப் இறுதிப்போட்டியில் 

சூளகிரி அணி 40 புள்ளிகள்

எடுத்து வெற்றி பெற்றது, இதே போல் பெண்களுக்கான இறுதி கபடி போட்டியில் கிருஷ்ணகிரி அணியும்,ஓசூர் அணியும் விளையாடின இதில் கிருஷ்ணகிரி பெண்கள் அணி 38 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது

பின்னர் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா ஈஷா ஒருங்கிணைப்பாளர்களான 

சுந்தரப்பாண்டியன், கணேசன்

ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட கபடி கழத்தின் செயலாளர் சக்கரவர்த்தி, விளையாட்டுத் துறை அமைப்பாளர் சந்தோஷ்,நகர்மன்ற உறுப்பினர் ஜெயகுமார் ஆகியோர் கலந்துக்

கொண்டு கபடி போட்டியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசும் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் இந்த விழாவின் போது ஈஷாயோக ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கரன், குமாரவடிவேல், பரமசிவம், ஜானகிராமன், ரங்கராஜன், மாதேஷ், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துக்

கொண்டனர்கள்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *