Wednesday, January 22
Breaking News:
Breaking News:
சந்திராயன் - 3 வெற்றியை தொடர்ந்து வர்த்தக ரீதியான பல நாடுகள் இந்தியாவை நோக்கி வர இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்களில் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனில் நடக்கும் நிகழ்வு வெளியாக இருப்பதாக சந்திராயன் திட்ட இயக்குனர் டாக்டர்.மயில்சுவாமி அண்ணா

சந்திராயன் - 3 வெற்றியை தொடர்ந்து வர்த்தக ரீதியான பல நாடுகள் இந்தியாவை நோக்கி வர இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்களில் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனில் நடக்கும் நிகழ்வு வெளியாக இருப்பதாக சந்திராயன் திட்ட இயக்குனர் டாக்டர்.மயில்சுவாமி அண்ணா

திருவள்ளூர் மாவட்டம் அரண்மனையில் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 23-ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சந்திராயன் திட்ட இயக்குனர் டாக்டர்.மயில்சுவாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் மாணவர்களிடையே பேசிய அவர் சந்திராயன்-3 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு சந்திராயன்-3 குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர்  மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சந்திராயன்-1 செயற்கை கோள் நிலவில் நீர் கண்டு பிடிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளின் போது உலக நாடுகள் திரும்பிபார்த்தார்கள். சர்வதேச ஆய்வு மையம்கூட  சந்திராயன்-1 செயற்கை கோளை நிலவிலேயே வைத்து கொண்டு நிலவில் உள்ள கனிம பொருட்களை உபயோகமாக பூமிக்கு கொண்டு வரமுடியுமா என்கிற பல கட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  நிலவில் உள்ள கனிம பொருட்களை பூமிக்கு பத்திரமாக கொண்டுவர பல  நாடுகள் முயற்சி செய்ததாகவும் ஆனால் தோல்வி அடைந்தது உள்ளதாகவும்,  ஆனால் சந்திராயன் செயற்கை கோள் மூலமாக நிலவில் உள்ள கனிம பொருட்களை பூமிக்கு பத்திரமாக கொண்டுவர முடியும் என்கின்றபோது அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும். இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக ரஷ்யா, இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் திரும்ப முயற்சி செய்கின்றனர். சந்திராயன் -3 மூலமாக இந்தியா அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பெரியவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்திருப்பதாகவும், சந்திராயன்-3 க்கு பிறகு வர்த்தக ரீதியாக பல புதிய நாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இன்னும் 5-ந்து 10 வருடங்களுக்குள் நிலவில் உள்ள சில கனிம பொருட்களை கொண்டுவர இருப்பதாகவும் அதற்காக அதிகப்படியான பொறியியலாளர் தேவைப்பட இருக்கிறார்கள் எனவே இன்றைய மாணவர்கள் அதற்காக தங்களை தாயார் படுத்தி கொள்ளவேண்டும் என்றார். மேலும் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சூரியனில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை கண்காணித்து செயற்கை கோள்களை பாதுக்க சூரியனை நோக்கி செயற்கை கோள் அனுப்பி உள்ளதாகவும் இன்னும் 3 மாதங்களில் சூரியனின் நடக்கக்கூடிய நிகழ்வுகள் வெளியாகும் என்றார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *