திருநெல்வேலியில், ஒரேநாளில் 400 மனுக்கள் பெற்ற, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலியில், ஒரேநாளில் 400 மனுக்கள் பெற்ற, மாவட்ட ஆட்சித்தலைவர்! மனுக்கள் கொடுப்பதற்காக, மக்கள் ஒட்டுமொத்தமாக குவிந்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலக கேட் பூட்டப்பட்டது! திருநெல்வேலி,ஜன.8:- தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், திங்கட்கிழமை தோறுமை நடைபெற்று வரும், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், இன்று [ஜனவரி.8] திருநெல்வேலியிலும், வழக்கம்போல் நடைபெற்றது. கொகிகிரகுளத்தில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப. கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பொதுமக்களிடமிருந்து, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னிகள் உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, சாலைகள் வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, இன்று (ஜனவரி.8) ஒரேநாளில் மட்டும், மொத்தம் நானூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை, மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன், மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, உத்தரவிட்டார். தொடரந்து, இந்த கூட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தொழில்நுட்ப கல்வி உதவித்தொகையாக மாணவ, மாணவிகள் மொத்தம் 10 பேருக்கு, தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளையும், விபத்து உதவித்தொகை, பாம்பு கடித்து இறந்தமைக்கான உதவித்தொகை, மின்சாரம் தாக்கி இறந்தமைக்கான உதவித்தொகை என, மொத்தம் 4 பேருக்கு, தலா ரூ.1 லட்சம் வீதம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆக மொத்தம் 14 நபர்களுக்கு, மொத்தம் ரூ.9 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவருடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், கலால் உதவி ஆணையர் ராமநாதன், துணை வருவாய் வட்டாட்சியர் செ.மாரிராஜா உள்ளிட்ட அலுவலர்கள், பங்கேற்றிருந்தனர். முன்னதாக, மனுக்கள் கெடுப்பதற்காக, மக்கள் ஒட்டுமொத்தமாக குவிந்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலக கேட், மூடப்பட்டது.
Comments:
Leave a Reply