திருநெல்வேலியில், தமிழ் சான்றோர் பேரவை சார்பில், சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின், 308-வது பிறந்த தின விழா கொண்டாட்டம்!
திருநெல்வேலி, செப்டம்பர்.1:- ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், "நெற்கட்டான் செவல்" பாளையத்தை தலைமையிடமாக கொண்டு, ஆண்டு வந்த மாமன்னர் பூலித்தேவன் ஆவார். இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், "வெள்ளையனே வெளியேறு!" என்று முதன்முதலாக, 1755- ஆம் ஆண்டிலேயே, வீர முழக்கமிட்டவர் மாமன்னர் பூலித்தேவன் ஆவார். இதன்காரணமாக இவர், "இந்தியாவின் முதல் விடுதலைப்போர்" எனக் கருதப்படும், 1857- ஆம் ஆண்டில் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்திற்கும், முன்னோடியாக கருதப்படுகிறார். இத்தகு பெருமைமிகு மாமன்னர் பசலித்தேவனின், 308-வது. பிறந்த தினம், அன்னாரின் சொந்த ஊரான "நெற்கட்டும் செவல்" பாளையம் உட்பட, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக, "தமிழ் சான்றோர் பேரவை" சார்பாக, திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜாநகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, மாமன்னர் பூலித்தேவனின் உருவப்படத்திற்கு, "மலர் மாலைகள்" அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது.இந்த
நிகழ்வுக்கு,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின், திருநெல்வேலி மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமை வகித்தார்.
"தமிழ் சான்றோர் பேரவை" பொறுப்பாளர் வழக்கறிஞர் சுதர்சன், முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில்
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின், மாநில செயலாளர் உமர் பாரூக், மண்டல செயலாளர் "வழக்கறிஞர்" தௌ.அப்துல்ஜப்பார், மாவட்ட செயலாளர் ஜமால், "மாவீரன்
சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்" தலைவர் மாரியப்ப. பாண்டியன்,
"புரட்சி பாரதம்" கட்சியின், நெல்லை மாவட்ட செயலாளர் "களக்காடு" ஏ.கே.
நெல்சன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின், தென்மண்டல செயலாளர் மங்கள் ராஜ் பாண்டியன், "சமூக ஆர்வலர்கள்" புல்லட்ராஜா, எம்.ஏ.சேவியர்
துரைசாமிதேவர்,
தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் வி.முருகன்,
உட்பட பலர், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், அனைவருக்கும் "சர்க்கரைப் பொங்கல்" வழங்கப்பட்டது. இந்
நிகழ்ச்சியின் போது,
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு," மாமன்னர் பூலித்தேவர் மாளிகை" என பெயர் சூட்ட வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு, "மாவீரன் சுந்தரலிங்கனார் வளாகம்" என, முன்பு இருந்தது போலவே, மீண்டும் பெயர்ச் சூட்ட வேண்டும்!- ஆகிய இரண்டு "தீர்மானங்கள்"
நிறைவேற்றப்பட்டன.
தமிழக மக்கள் முன்னேற்ற கஜகத்தின், மாநகர இளைஞர் அணி தலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.
Tags:
Comments:
Leave a Reply