திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியில், வாழைப்பயிர்களை நாசப்படுத்தியுள்ள, காட்டுப்பன்றிகள்! கண்ணீரில் மிதக்கும் விவசாயிகள்!
திருநெல்வேலி,அக்.3:-
திருநெல்வேலி புறநகர் மாவட்டம், பேட்டையை அடுத்துள்ள "கருங்காடு" பகுதியில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், வாழைப்பயிர்கள் நடப்பட்டுள்ளன. அவ்வாறு நடப்பட்டுள்ள வாழைப் பயிர்களை, அவற்றை நட்ட விவசாயிகள், கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர். இந்தச் சூழ் நிலையில், கருங்காடு பகுதியில், கரடி மற்றும் காட்டுப்பன்றிகளின், நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. விவசாயிகள் வாழைப்பயிர்களை நட்டுள்ள, வாழைத் தோட்டங்களுக்குள், நள்ளிரவில் காட்டுப்பன்றிகள் நுழைந்து, வாழைப்பயிர்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன. இந்த சேதம் குறித்து, கருங்காடு பகுதி விவசாயிகள், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும், உடனடியாக தகவல் அளித்துள்ளனர். அப்படியிருந்தும், இதுவரையிலும், மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும், எந்தவொரு நடவடிக்கையையும், எடுக்கவில்லை. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும், சேதமான வாழைப்பயிர்களால், கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் காலதாமதமின்றி தலையிட்டு,உரிய நடவடிக்கைகளை எடுக்க, முன்வர வேண்டுமென, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:
Comments:
Leave a Reply