Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி மாவட்டம்  மலையடிப்புதூரில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய நபரை, கைது செய்த வனத்துறையினர்!

திருநெல்வேலி மாவட்டம் மலையடிப்புதூரில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய நபரை, கைது செய்த வனத்துறையினர்!

திருநெல்வேலி,அக்.9:- நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட, மலையடிப்புதூர் அகலிகை சாஸ்தா கோயில் வனப்பகுதியில், களக்காடு துணை இயக்குநர் டி. ரமேஷ்வரன் உத்தரவின் பேரில்,திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் கு.யோகீசுவரன் தலைமையில், வனவர் எஸ்.முத்தையா, வனக்காப்பாளர் எஸ்.பரமசிவன், வனக்காவலர் ஆர்.அன்னத்துரை மற்றும் வனப்பணியாளர்கள் ரோந்துப்பணியில் நேற்று [அக்டோபர்.8] ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான காப்புக்காட்டுக்குள், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, கீழ சாலைப்புதூர்,  தெற்குத் தெருவைச் சேர்ந்த துரைச்சாமியின் மகன்  கோபால் (வயது.42)  என்பவர், வனவிலங்கான உடும்பு ஒன்றை, இறைச்சிக்காக வேட்டையாடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 பிரிவு  2, 9, 27,31,39, 50 மற்றும் 51 ஆகியவற்றின்படி, கோபால் கைது செய்யப்பட்டார். அவரை, நாங்குநேரி குற்றவியல்  நீதிமன்ற நடுவர் முன்பாக, ஆஜர் படுத்தினர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *