என்று தீரும் இந்த அவலம்.??? விழுப்புரம் to திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை உள்ள கண்டாச்சிபுரம் பேருந்திற்கு காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அவதி,,! கடை வியாபாரிகள் பாதிப்பு,,!!
பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், மற்றும் கடைகள் அமைத்துள்ள பகுதியில் கடந்த மூன்று மாதமாக நெடுஞ்சாலையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் எடுக்கபட்டு பணியை முழுமையாக முடிக்காமல் அலட்சியமாக உள்ள நெடுஞ்சாலை துறையை வன்மையாக கண்டிப்பதாகவும்.
அரைகுறையாக போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் மழை நீரும், பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு நீரும் ஒன்று சேர்ந்து, வெளியேற வழி இல்லாமல் துர்நாற்றம் வீசிக்கொண்டு சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு மற்றும் கிருமிகள் தொல்லை மிகுதியாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்சமயம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவலாக பரவி வருகிறது. இந்த தருணத்தில் பல முறை முறையிட்டும் நெடுஞ்சாலை துறையும், அருணை கன்சக்சன் ஒப்பந்ததார்களும் செவி சாய்க்காமல் கண்டும் காணாமல் உள்ளனர். திருக்கோவிலூர் சாலை குறுக்கே வாய்க்கால் அமைக்க வேண்டி உள்ளதால் கடைசியாக தான் இதை சரிசெய்ய முடியும் என அலட்சியமாக கூறி வருகின்றனர்.
தேவை அறிந்து பணி செய்யாமல் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் அவசர அவசரமாக இரவு பகலாக பணி செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றாமல் தேசிய நெடுஞ்சாலை ஓரமாகவே கழிவுநீர் கால்வாய் போடுகின்றனர்
எனவே அலட்சியமாக செயல்பட்டு வரும் நெடுஞ்சாலை துறையையும், ஒப்பந்ததார்களையும் உடனடியாக கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கக்க வேண்டும் என வழக்கறிஞர் பிரகாஷ் மற்றும் CPl வட்டச் செயலாளர்
கணபதி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:
Comments:
Leave a Reply