தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
பருவமழை பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து பழைய பொருட்களைக் கொண்டு எவ்வாறு மீட்பது, தீயினால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, சாலையோரம் மரங்கள் மற்றும் கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்ற பயிற்சிகளை தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினர் வழங்கினர்.
மாவட்ட அலுவலர் வடிவேல் அவர்களின் தலைமையில்
உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் மற்றும் குழுவினர் போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர் இதில் என்சிசி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் ஒய்.ஆர்.சி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை 100க்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் திரு அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்,
தேசிய மாணவர் படை மாஸ்டர் திரு விநாயகம் அவர்கள் நன்றியுரை கூறினார்.
Tags:
Comments:
Leave a Reply