Tuesday, December 24
Breaking News:
Breaking News:
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க செயற்குழு கூட்டம் சங்க தேர்தல் குறித்து ஆலோசனை

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க செயற்குழு கூட்டம் சங்க தேர்தல் குறித்து ஆலோசனை

ஈரோடு அக். 9

ஈரோடு மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஈரோடு கோட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது . ஈரோடு மாவட்ட தலைவர் உதயசங்கர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளரும் மாநில இளைஞரணி துணை அமைப்பாளருமான சோழா ஆசைத்தம்பி வரவேற்றுப் பேசினார். மாவட்ட கௌரவ ஆலோசகரும் மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான டாக்டர் நந்தகோபால்  மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் வசந்தா சுத்தானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி செங்குந்தர் உறுதிமொழியை வாசித்தார் .  மாவட்ட பொருளாளர் மோகன் நிதி நிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் வரவு செலவு கணக்கை அங்கீகரித்தல் ,கிளை சங்கங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை சங்க நிர்வாகிகளுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தல், ஆண்டறிக்கை சமர்ப்பித்தல், மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் வஜ்ரவேலு நன்றி கூறினார் .

இந்த கூட்டத்தில் அனைத்து கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *