நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்களுடன், மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!
திருநெல்வேலி சந்திப்பு, பேருந்து நிலைய பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து, நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்களுடன், மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு! திருநெல்வேலி,நவ.4:- வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை ஏற்படுத்துதல், சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட, பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையப் பகுதிகளில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சாலைகள், பெய்து வருகிற கனமழை காரணமாக, பழுதடைந்து உள்ளன. இதனைத் தொடர்ந்து, பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை மூலம், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், விரைவு படுத்தி உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப் பரிந்துரைப்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தம் 63 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத். துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, சென்ற மாதம் [அக்டோபர்] ஒப்புதலும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டன. அதன் அடிப்படையில், இன்னும் 10 தினங்களுக்குள், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையப் பகுதிகளில், சாலைகள் அமைத்திடும் பணிகள் நடைபெற உள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், இன்று (நவம்பர்.4) காலையில், நெல்லை சந்திப்பு பகுதிகளை, நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்களுடன், நேரில் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்திய போது,தெரிவித்தார். இந்த ஆய்வு மற்றும் ஆலோசனைகளின் போது, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சண்முக நாதன், உதவி பொறியாளர் ராஜேந்திரன், சாலை ஆய்வாளர் முனுசாமி, சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்ட உதவி பொறியாளர் பிலிப் அந்தோணி, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர், உடனிருந்தனர்.-------------------------------"TALKS OF INDIA"செய்திகளுக்காக, திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.
Comments:
Leave a Reply