Friday, November 22
Breaking News:
Breaking News:
பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில், நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்! அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் பங்கேற்பு!

பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில், நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்! அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.6:- "தென்னிந்தியாவின் பல்கலைக்கழகம்" (OXFORD OF SOUTH INDIA) என்றழைக்கப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள, மிகப்பழைமையான கலாலூரிகளில் ஒன்றான, தூய சவேரியார் தன்னாட்சி (AUTONOMOUS) கல்லூரியில், அக்கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழா, இன்று (அக்டோபர்.6) காலையில், மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக, நூற்றாண்டு நினைவாக கட்டப்பட்டுள்ள, புதிய  கட்டிடத்தின் திறப்பும், அதனைத் தொடர்ந்து, நன்றித் திருப்பலியும், நடைபெற்றன.

 போப் பிரான்சிஸ் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், பல்வேறு மறை மாவட்டங்களில் வந்திருந்த ஆயர்களும், பேராசிரிய பெருமக்களும், பணியாளர்களும் பங்கேற்றிருந்தனர். நண்பகலில் நடைபெற்ற பாராட்டு  நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் "அருட்தந்தை" முனைவர் எஸ்.மரியதாஸ் அடிகளார், அனைவரையும் வரவேற்று பேசினார்.  பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற திரு மு.அப்துல் வகாப், "சிறப்பு" அழைப்பாளராக  கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். மதுரை கத்தோலிக்க மறை மாவட்ட  பேராயர் "அருட்தந்தை" முனைவர் அந்தோணி பாப்புசாமி அடிகளார், பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் "அருட்தந்தை" முனைவர் எஸ்.அந்தோணிசாமி அடிகளார், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் "அருட்தந்தை" முனைவர் ஸ்டீபன் ஆண்டனி அடிகளார், பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர்  "அருட்தந்தை" முனைவர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ் அடிகளார், மாநில இயேசு சபை தலைவர் "அருட்தந்தை" முனைவர் ஏ. தாமஸ் அமிர்தம் அடிகளார், பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் முனைவர் வி. ஹென்றி ஜெரோம் அடிகளார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். விழா நிறைவில், தூய சவேரியார் கல்லூரி செயலாளர் "முனைவர்"  ஜி.புஷ்பராஜ் அடிகளார், அனைவருக்கும் "நன்றி"கூறினார். தொடர்ந்து நடைபெற்ற, மாணவ மாணவியரின், வண்ணமிகு  கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழா நிகழ்வுகள் அனைத்தையும், "முனைவர்" மேரி ஜெலஸ்டின் கலா, பேராசிரியர்கள் ஜோசப் மற்றும் ஜெபராஜ் ஆகியோர், தொகுத்து வழங்கினர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *