பொய்யான தகவலை அளித்த திருக்கோவிலூர் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆர் குமார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கிராமத்தில் வேடனார் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு160600 ரூபாய் அரச தரப்பில் 03-06-2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.சுமார் 1 வருடத்திற்கு மேல் கழிவுநீர் கால்வாய் பணியை தொடங்காமல் இருந்ததால் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் CM செல்லுக்கு விளக்கம் கேட்டு மனு ஒன்று அளித்து இருந்தார்
அதில் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆர் குமார் என்பவர் டிஅத்திப்பாக்கம் கிராமத்தில் வேடனார் தெருவில் கழிவுநீர் கால்வாய் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பொய்யான தகவலை தந்துள்ளார்.இந்த விளக்கு கடிதத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கையொப்பமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் வேடானார் தெருவில் மேற்பார்வையாளர் ஆர் குமார் கூறியதற்கு எதிர்பாராத எந்தவித வேலையும் தொடங்கவில்லை என்றும் பொய்யான தகவல் எதற்கு கொடுத்துள்ளார் என்றும் தெரியவில்லை என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இப்படி ஒரு அதிகாரி பொய்யான தகவல் அளித்து இருப்பது மனவேதனை அளிப்பதாகவும் மேலும் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கிராம வளர்ச்சியை முன்னிட்டும் ஊழலை ஒழிக்கும் வகையிலும் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனையுடன், ஆதங்கத்துடனும் கூறுகின்றனர்
Tags:
Comments:
Leave a Reply