மணம்பூண்டி ஊராட்சியில் தேங்கி இருக்கும் மழை நீரால் நோய் தொற்று ஏற்படக்கூடும் அச்சத்தில் வாழும் அப்பகுதி மக்கள்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி புலவர் வீதியில் 5வது வார்டில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் குட்டை போல் ஆங்காங்கே காட்சியளிக்கின்றன.மேலும் அப்பகுதியில் உள்ள வீடு இல்லாத காலி மனையில் தெருவில் ஓடும் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சி அளிக்கின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் கொசு அதிக அளவு உற்பத்தி ஆவதாகவும் மலேரியா, டெங்கு காய்ச்சல் வரக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே மணம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழை நீரை அப்புறப்படுத்தி அப்பகுதி மக்கள் சுகாதார வாழ்வுக்கு உதவ வேண்டும் எனவும் வடிநீர் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
Tags:
Comments:
Leave a Reply