Tuesday, December 03
Breaking News:
Breaking News:
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் கேரளாவை நோக்கி சென்ற கார் தீ விபத்து - இஞ்சின் மற்றும் இருக்கைகள் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் கேரளாவை நோக்கி சென்ற கார் தீ விபத்து - இஞ்சின் மற்றும் இருக்கைகள் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் கேரளாவை நோக்கி சென்ற கார் தீ விபத்து - இஞ்சின் மற்றும் இருக்கைகள் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லைஜு. இவர் டைல்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி நிகிதாவுடன் தனது உரிமையாளருக்கு சொந்தமான காரில் மதுரையில் இருந்து கேரளாவிற்கு கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டாம்பரப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரிலிருந்து புகை வர ஆரம்பித்ததும், காரை நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கி உள்ளனர். அப்போது கார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.


பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், விரைந்து வந்த கரூர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், காரின் இஞ்சின் பகுதி அமைந்துள்ள முன்பக்கம் மற்றும் உள்பகுதியில் முற்றிலும் எரிந்து கருகியது. இதனால் கார் பார்ப்பதற்கு எலும்புக்கூடு போல காட்சியளித்தது. அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *