Wednesday, January 22
Breaking News:
Breaking News:
மலைவாழ் மக்களுடன், இனைந்து கொண்டாட பட்ட பொங்கல் விழா

மலைவாழ் மக்களுடன், இனைந்து கொண்டாட பட்ட பொங்கல் விழா

கோவை ஆனைகட்டி அடுத்த கோபணாரி பகுதியில்  மலைவாழ் மக்களுடன், இனைந்து கொண்டாட பட்ட பொங்கல் விழா விழா நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட மழைவால் மக்கள், பாரம்பரிய மிக்க வகையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு பூஜை செய்து வழிபட்டனர். 

கோவையை சேர்ந்த நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிடள் ட்ரஸ்ட், கோவை ஆதி பெடரேஷன், லயன்ஸ் க்ளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்டார்ஸ் மற்றும் க்ளப்ஸ் இன் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 சி சார்பாக இன்று, 14வது ஆண்டு மெகா பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி, கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கோபணாரி பகுதியில் உள்ள  மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது, இதில் இந்த பகுதியை சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட  மலைவாழ் மக்கள் வசிக்கும்  கிராமங்களில் இருந்து  2500க்கும் மேற்பட்ட மழைவால் மக்கள்  கலந்து கொண்டனர், முன்னதாக  மழைவால் மக்கள் பாரம்பரிய மிக்க பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு பூஜை செய்து வழிபட்டனர், பின்னர் மழைவால் மக்களின் பாரம்பரிய இசை கருவிகளுடன் பாரம்பரிய நடனம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து அனைத்து மழை வால் மக்களுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கபட்டது, இதில் மழைவால் மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இரண்டு கம்ப்யூட்டர்கள், மற்றும் கல்வி உபகரணங்கள், மழைவால் மக்களுக்கு வேஸ்டி, சேலைகள் மற்றும் போர்வைகள் வழங்கபட்டது, மலைவாழ் மக்களுடன் இனைந்து காக்னிஸன்ட் ஐடி நிறுவன ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும் பாரம்பரிய நடனங்கள் ஆடியும் கொண்டாடினர். 

இந்த நிகழ்வில் என்எம்சிடி அறக்கட்டளையின் நிறுவனர் சங்கரநாராயணன், லயன்ஸ் க்ளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்டார்ஸ் அமைப்பின் சார்பாக கமலகண்ணன், சங்கர், ஹரி, முகாம் வெங்கடேஷ், ரவிச்சந்திரன், ராமலிங்கம், விஜயன், மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *