மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பாக இலவச மருத்துவ முகாம்
மாமல்லபுரம் அடுத்த பவளக்காரன் சத்திரத்தில் இயங்கி வரும் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சாவடி பகுதியில் இயங்கி வரும் மாதா அமிர்தானந்தம் சார்பாக இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி மற்றும் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அமிர்தவர்ஷம் அவர்களின் மூத்த துறவியில் ஒருவரான சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தபுரி தலைமையில் நடைபெற்ற முகாமினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இம் முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம் தடுப்பூசி, சர்க்கரை நோய் கண்டறிதல், பெண்கள் மகப்பேறு மருத்துவம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, கொரோனா பரிசோதனை, பொது அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை சிகிச்சை, கண் பரிசோதனை, தோல் நோய், பல் மருத்துவம், சித்த வைத்தியம், ஸ்கேன் வசதி, ஆய்வக வசதி, இசிஜி வசதி, எச்ஐவி பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் பேரிடர் காலங்களில் சிகிச்சை அளிக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய கேரவன் வாகனத்தில் நடத்தப்பட்டு அந்தந்த நோய்களுக்கான சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டு அந்தந்த நோய்களுக்கு ஏற்றவாறு மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது, இம் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாம் நாளை வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
Comments:
Leave a Reply