Wednesday, January 22
Breaking News:
Breaking News:
யூடியூபர் இர்ஃபான் கார் மோதி பெண் மூதாட்டி உயிரிழப்பு ...

யூடியூபர் இர்ஃபான் கார் மோதி பெண் மூதாட்டி உயிரிழப்பு ...

சமூக வலைதளங்களில், பல உணவுகளை ரிவ்யூ செய்யும் யூடியூப் சேனல்கள் இருந்தாலும், சில youtube சேனல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் என்பது, இருந்து வருகிறது. அந்த வகையில், யூடியூபில் " இஃப்ரான் வியூஸ் " என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்பவர் youtube சேனல் நடத்தி வருகிறார்.  சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான யூடியூப் சேனலாக இந்த சேனல் இருந்து வருகிறது. உணவு குறித்த வீடியோக்கள் போடுவதால், இவருக்கு தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. இவர் யூடியூபில் வைத்திருக்கும் சேனலுக்கு, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் இருந்து வருகின்றனர்.


சமீபத்தில் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது மனைவியுடனும் வெளியே செல்லும், வீடியோக்களிலும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் இர்பான். இந்த நிலையில் தென் மாவட்டத்திலிருந்து , முகமது இர்பான், தனது பென்ஸ் காரில் சென்னை நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்த பொழுது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மீது பென்ஸ் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். 


இந்த நிலையில், இது கறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் . மேலும் இர்ஃபானின் பென்ஸ் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *