"வாயால்"ஒரே நேரத்தில் 2 ஓவியம்!
கைகளால் இல்லைங்க!
"வாயால்"ஒரே நேரத்தில் 2 ஓவியம்!
முதல்வர், கல்வி அமைச்சர் படம் வரைந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் கோரிக்கை வைத்த ஓவியா ஆசிரியர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கைகள் பயன்படுத்தாமல், "வாயால்" ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் படத்தை வரைந்தார்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகியப் பாடப்பிரிவுகளை சொல்லித்தரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேர் இருக்கிறார்கள்.
13 ஆவது ஆண்டாக பணிநிந்தரம் ஆகாமல் குறைவான மாத சம்பளம், உணவு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுகின்றனர். விலைவாசி உயர்வால் குடும்ப பொருளாதாரத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் தவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் 181 வது உறுதி மொழியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. எனவே பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், திமுக தேர்தல் அறிக்கையான 181 வது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை நிறைவேற்றி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டி 'ப்ளீஸ் எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும்' வாசகத்தை எழுதி கைகள் பயன்படுத்தாமல், "வாயால் ஒரே நேரத்தில்" முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்கள் படத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் 15 நிமிடங்களில் வரைந்து நூதன முறையில் கோரிக்கை வைத்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பகுதி நேர ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்
Tags:
Comments:
Leave a Reply