விழுப்புரம் நகராட்சி சாலை அருகே குப்பையை எரிப்பதால் மூச்சுத் திணறல் மற்றும் விபத்தும் ஏற்படுமோ என்ற பயத்தில் வாகன ஓட்டிகள்.
விழுப்புரத்தில் இருந்து எலிசத்திரம் செல்லும் வழியில் E.S. கல்லூரி அருகே விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கில் குப்பைகளை போடாமல் சாலையின் ஓரமாக கொட்டி விட்டு அதனை தீயிட்டு எரிப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் அருகில் வரும் வாகனமும் மற்றும் எதிரே வாகனமும் தெரியாத அளவிற்கும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் புகை வருவதாகவும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கூறுகின்றனர்.மேலும் இந்த தீயானது தொடர்ந்து 3 நாட்களாக இருந்து கொண்டு இருப்பதாகவும். எனவே விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
Comments:
Leave a Reply