Tuesday, December 24
Breaking News:
Breaking News:
வீரப்பாண்டி அரசு மாணவர் ஆதி திராவிடர் நலம் விடுதியை சோதனை செய்தார் வருவாய் வட்டாட்சியர் ஜி.கற்பகம்.

வீரப்பாண்டி அரசு மாணவர் ஆதி திராவிடர் நலம் விடுதியை சோதனை செய்தார் வருவாய் வட்டாட்சியர் ஜி.கற்பகம்.


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்ட நிர்வாக நடுவர் ஜி.கற்பகம் அவர்கள் மாதாந்திர சோதனை செய்வது வழக்கமும் எனவே இன்று சோதனை செய்து விசாரணை செய்ததில்.


 மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து பின் உடனே சமையல்காரர்களை  அழைத்து ஏன் சாம்பாரில் காய்கறிகள் கூடுதலாக போடவில்லை எனவும், சாம்பார் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும் எனவும், உருளைக்கிழங்கு பொரியலில் உப்பு அதிகமாக உள்ளதாகவும் இது போன்ற உணவை உங்கள் பிள்ளைகளுக்கு தருவாயா என்று கேட்டார்


இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்க கூடாது எனவும்  உங்கள் பிள்ளைகளுக்கு சமைப்பது போல் சுவையாக சமைத்து தர வேண்டும் என எச்சரிக்கை செய்தார்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *