ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலய 50 ஆம் ஆண்டு திருத்தேர் விழா
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த காட்டுகருணை கிராமத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலய 50 ஆம் ஆண்டு திருத்தேர் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை 6 மணிக்கு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிதிருத்தேரில் எழுந்தளினார்.அதன் பின்னர் காலை 8 45 மணிக்கு மேளதாளங்கள் நாதஸ்வரங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கோவிந்தா, கோவிந்தா என திருநாமம் உச்சரித்தபடி மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன்,செங்கல்பட்டு மாவட்ட அரசு வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேரின் வட கயிறை பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் கிராமத்தில் உள்ள 4 மாட வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.மாலை 4 மணிக்கு இளைஞர்களுக்கிடையே சறுக்கு மரம் ஏறும் போட்டி,பெண்களுக்கான இசை நாற்காலி போட்டி உறியடி திருவிழா, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு புஷ்ப விமானத்தில் மின் விளக்கு அலங்காரத்துடன் வீதி உலா வருதல் நடைபெற்றன.
கரகாட்டம் நையாண்டி மேளம் விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் தலைமையிலான விழா உபயதாரர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
Tags:
Comments:
Leave a Reply