Wednesday, December 25
Breaking News:
Breaking News:
2023ம் ஆண்டுக்கான சிறந்த பேராசிரியர் விருது வழங்கும் விழா

2023ம் ஆண்டுக்கான சிறந்த பேராசிரியர் விருது வழங்கும் விழா

கோவை வடகோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியின் பொறியியல் துறை பேராசிரியர் பார்வதிக்கு இன்று 2023ம் ஆண்டுக்கான சிறந்த பேராசிரியர் விருது வழங்கும் விழா 





கோவை வடகோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில், பல்வேறு துறைகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர், இக்கல்லூரியில், கடந்த 2003 ஆண்டுகளாக பொருளாதார துறை பாடபிரிவில் மாணவிகளுக்கு கற்று கொடுக்க ஆசிரியர் பார்வதி, பணியமர்த்த பட்ட நிலையில், தொடர்த்து 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல், கற்பித்தலை மாணவர்கள் வெளிப்படுத்துதல், போன்ற பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு உதவிகரமாக புரிந்தமைக்காக, பேராசிரியர் பார்வதிக்கு இன்று  சிறந்த ஆசிரியருக்கான விருதினை, சென்னையை சேர்ந்த எலிசபத் அறக்கட்டளை சார்பாக வழங்கபட்டது, இதனை சென்னை எலிசபெத் அறக்கட்டளையின் தலைவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார், 2023ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பேராசிரியர் என்ற  விருதை பெற்ற பார்வதி செய்தியாளர்களிடம் கூறுகையில், பொருளாதாரம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளது இதற்கு மாணவர்களை முழுமையாக தயார் படுத்த வேண்டும், இதனை நான் முழுமனதுடன் செய்து வருகின்றேன், என்னிடம் கற்ற மாணவர்கள் பலரும் பல்வேறு துறையில் சாதனை படைத்து உள்ளனர், இதுவே தனக்கு மிக பெரிய விருதாக நான் கருதுகிறேன், என் வாழ் நாள் முழுவதும் சிறந்த கற்பித்தலுக்கான விருது இன்று எனக்கு வழங்க பட்டது தனக்கு பெருமையாக உள்ளது என்றார் இந்த நிகழ்வில் அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியின் வேந்தர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், நியுடில்லியை சேர்ந்த சென்டர் பார் வுமன் டெவலப்மென்ட் ஸ்டடிஸ் இயக்குனர் மீனாட்சி, பதிவாளர் கெளசல்யா, மற்றும் பேராசிரியர்கள் ஷோபனா கொக்கொடன், மனோன்மணி, அருள் செல்வம், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *