Wednesday, December 25
Breaking News:
Breaking News:
ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக சூரியனை ஆய்வு செய்ய வேண்டி  "சூரியன் மீது தேசியக்கொடி" வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தல்!

ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக சூரியனை ஆய்வு செய்ய வேண்டி "சூரியன் மீது தேசியக்கொடி" வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தல்!

ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக சூரியனை ஆய்வு செய்ய வேண்டி  "சூரியன் மீது தேசியக்கொடி" வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தல்!


 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த  சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த  சு.செல்வம் அவர்கள் ஆதித்யா எல் -1 விண்கலம்  வெற்றிகரமாக சூரியனை நோக்கி சென்று ஆய்வு செய்யவேண்டியும், இந்திய விஞ்ஞானிகளை பாராட்டும் வகையிலும் சூரியனை தெரியும்படி  கண்ணாடி போன்ற தாளில் வைத்து அதில் தேசிய கொடியை வரைந்து "சூரியன் மீதே" வரைந்தது போன்று வரைந்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல் முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திராயன் -3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திராயன் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக

ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம் பி.எஸ்.எல். சி சி -57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது, சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் செயற்கைகோளை நிலை நிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது, ஆதித்யா எல்-1 திட்டத்தின் நோக்கம் ஆகும், சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை போன்றவைகளை ஆய்வு செய்யும்.

சூரியனை ஆராய்வதற்கு என இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நாடுகள் மட்டுமே பிரத்யேக செயற்கைக்கோளை  செலுத்தியுள்ளன, அந்த வரிசையில் சூரியனை ஆராய்வதற்காக  பிரத்யேக செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் நாடு, நம் நாடு எனும் பெருமையை ஆதித்ய எல்-1 மூலம் இந்தியா பெற உள்ளது.ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடையவேண்டியும், இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் வகையிலும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் சூரியனை  கண்ணாடி பொன்ற தாளில் வைத்து பார்த்து இந்தக் கண்ணாடித் தாளில் தெரியும் சூரியன் மேல் ஆரஞ்சு வண்ணமும் கீழே பச்சை வண்ணமும் தீட்டி வட்டமான சூரியனில்  அசோக சக்கரமும் வரைந்து சூரியனின் மீதே தேசியக்கொடி  ஓவியமா, எப்படி வரைய முடியும்  என்று ஆச்சரியப்படுவது போன்று பத்து நிமிடங்களில் சூரியன் மீது தேசியக்கொடி வரைவது போன்று  ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *