Monday, December 23
Breaking News:
Breaking News:
இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எல்லை விவகாரம்

இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எல்லை விவகாரம்

சீன அரசாங்கம் ஆகஸ்ட் 28 அன்று சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, இந்த வரைபடத்தில், முழு தென்சீனக் கடல் மற்றும் தைவானையும் சீனா தனது பிரதேசமாக அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சில காலத்திற்கு முன்பு சீனா மாற்றியது. அவ்வாறு செய்வதால் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மாற்றிவிட முடியாது என்று இந்தியா தெளிவாகக் கூறியிருந்தது        புதுதில்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவதற்கு முன்னதாக இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சீனாவின் எல்லைக் கோரிக்கைக்கான உலகப் புகழ்பெற்ற 9-கோடு மீண்டும் காட்டப்பட்டுள்ளது. 9-கோடு 1940 களில் சீன புவியியலாளர் மூலம் ஒரு வரைபடத்தில் வரையப்பட்டது. இது U- வடிவ கோடு ஆகும், இது தென் சீனக் கடலின் 90 சதவீதத்தை உரிமை கோருகிறது. ஆனால் அந்தப் பகுதியை பிலிப்பைன்ஸ் அரசு வடக்கு பிலிப்பைன்ஸ் கடல் என்று அழைக்கிறது.

எனவே, சீனாவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என குற்றம் சாட்டப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா எப்போதும் மறைமுகமாக தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. அருணாச்சல பிரதேசத்திற்கு எந்த அரசியல்வாதியும் வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் சீனா தனது வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றியது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால் இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949 ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

இதனிடையே சீனா புதிய வரைபடம் வெளியிட்ட விவகாரம் இந்தியாவில், அரசியல் ரீதியிலான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகின்றனர். 

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *