எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகள் உள்ள, ஆதரவற்ற சிறார்கள் இல்லத்திற்கு, விலையில்லா வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கிய, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள்
திருநெல்வேலி, செப்டம்பர்.2:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 29வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, மாநிலம் முழுவதிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஏழை-எளிய மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும், அக்கட்சியினரால் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பாளையங்கோட்டை த.மு.மு.க. சார்பாக, திருநெல்வேலி ரெட்டியார்பட்டி, ஜெயில்சிங் நகரில் உள்ள, அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனமான, "ஹோப் பவுண்டேஷன்" (HOPE FOUNDATION) ஆதரவற்றோர் சிறார்கள் இல்லத்திற்கு, அவர்களின் பயன்பாட்டிற்கென, பெரிய அளவிலான விலையில்லா "வண்ணத் தொலைக்காட்சி" (32 INCH SMART TV ) பெட்டி, நேற்று (செப்டம்பர்.1) இரவு வழங்கப்பட்டது. அதனை, நெல்லை மாவட்ட த.மு.மு.க. தலைவரும், நெல்லை மாநகராட்சி. 50- வது வார்டு கவுன்சிலருமான கே.எஸ். ரசூல் மைதீன், வழங்கினார். ஆதரவற்றோர் இல்லப் பொறுப்பாளர் கே.ராணி, அதனைப் பெற்றுக் கொண்டு, நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, அங்கு தங்கியுள்ள, எச்.ஐ.வி. பாதித்த
சிறுவர்கள் உள்ளிட்ட, ஆதரவற்ற சிறார்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாளை ஏ.சி. செய்யது அலி தலைமை வகித்தார். பாளை தமுமுக நிர்வாகிகள் தலைவர் ஜாபர், துணைத் தலைவர் முஹம்மது சுபஹான்,
துணைச் செயலாளர் ஷேக் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் அ.காஜா, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக்மதார் உட்பட பலர், கலந்து கொண்டனர்
Tags:
Comments:
Leave a Reply