Wednesday, October 16
Breaking News:
Breaking News:
எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கரூரில் வெகு விமர்சையாக கொண்டாட்டம்.

எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கரூரில் வெகு விமர்சையாக கொண்டாட்டம்.

கரூர் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இலைமலிந்தவேல் பூக்குடலை திருவிழா என்பது, கடந்த பல வருடங்களுக்கு முன்னர் புராதான காலத்தில் கரூரை ஆண்ட புகழ்சோழ மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த போது, சிவகாமி ஆண்டார் என்கிற வயது முதிர்ந்த முனிவர்,  நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டு பசுபதீஸ்வரருக்கு சாற்றி தினமும் வழிபாடு நடத்தி வந்துள்ளார். ஒரு நாள் சாமிக்கு சாற்றுவதற்கு பூக்களை எடுத்து வந்த போது, புகழ் சோழரின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து பிளிறி கொண்டு ஓடியது. அப்போது சிவகாமி ஆண்டாரின் பூக்குடலையை (குடலை என்பது ஓலையால் முடையப்பட்ட கூடை) அந்த யானை தட்டி விட்டது. சிவனுக்கு சாற்ற வேண்டிய பூக்கள் கீழே கொட்டி விட்டதை எண்ணி சிவகோ... சிவகோ... என அந்த முனிவர் கதறியுள்ளார்.  


இந்நிலையில் பட்டத்து யானையை வீழ்த்திய எறிபத்தர் சிவதொண்டு புரிவதையே எப்போதும் சிந்தையில் வைத்திருக்கும், இலைமலிந்தவேல் நம்பி எறிபத்த நாயனார் இதனை அறிந்தார். பின்னர் உடனடியாக அங்கு சென்று மழு என்கிற (கோடாரி) ஆயுதத்தால் அந்த யானையையும், பாகருடன் சேர்ந்த அரச வீரர்களையும் வெட்டி கொன்றார்.

இதனை அறிந்த புகழ் சோழ அரசர் தனது படையுடன் வந்து, நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து தன்னையும் வெட்டி கொன்று விடுமாறு எறிபத்த நாயனாரிடம் தனது வாளை நீட்டி வேண்டினார். அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார். மேலும் இறந்தவர்களை உயிர்பித்து அருள்பாலித்தார். மகா அஷ்டமி நாளில் நடந்த இந்த வரலாறு தான் எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவாக கரூரில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

கரூரில் முக்கிய சாலையிலான ஜவஹர் பஜார் கரூர் பேருந்து நிலையம் தின்னப்பா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள்.பூக்குடலை ஏந்தி .ஆரவாரமாக நடனமாடி ஊர்வலமாக சென்றனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *