கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் அட்லஸ் தனியார் மண்டபத்தில்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மகளிர்களுக்கு வங்கி ஏடிஎம் கார்டு வழங்கினார்.
பெண்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் மாதம் ரூ.1000 உரிமை தொகையை பெற உள்ளனர்.
எனினும் ஒரே நாளில் அனைவருக்கும் பணம் அனுப்ப முடியாது என்பதால் நேற்றய தினமே பணம் அனுப்பும் பணி தொடங்கியது. முன்னதாக ரூ.1 செலுத்தி பரிசோதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிலருக்கு பணம் அனுப்பப்பட்டது.சில பெண்மணிகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.
மகளிர்கள் தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர்.
உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ மாணிக்கம் சிவகாமசுந்தரி.பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. மேயர் கவிதா கணேசன்.
ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர்
Tags:
Comments:
Leave a Reply