Sunday, November 24
Breaking News:
Breaking News:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு இலவச ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு இலவச ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்தார்.

கரூர் அடுத்த பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு இலவச ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தாய் சேய் பரிசு பெட்டகத் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், நம்மை காக்கும் 48, 

108 அவசர ஊர்தி சேவை, 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம், இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா,


தமிழகத்தில் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட காலம் ஆயுள் கைதியாக சிறையில் இருந்து வருபவர்களை  அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பல்வேறு போராட்டங்கள் நடத்தியது. கடந்த ஜூலை மாதம் கோவையில் உள்ள மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.  இந்த நிலையில்  நீண்ட காலம் சிறையில் இருந்து வரும் 49 கைதிகளை கண்டறிந்து தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய கோரி தமிழக ஆளுநருக்கு திமுக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. ஒரு மாத காலம் ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்காமல் அந்த கடிதம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து வருகிற அக்டோபர் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.


காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என்று, கர்நாடக பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. காவிரி விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதற்காக முதல்வர் சிறந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். பாஜக கூட்டணியில் இருந்து தற்காலிகமாக அதிமுக விலகி இருப்பதை வரவேற்கிறோம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு நிலையிலேயே இருந்துள்ளது. குறிப்பாக குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவு, மணிப்பூர் கலவரம் குறித்து மௌனம் காப்பது அதிமுக மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. நாளுக்கு நாள் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவடைந்து வருகிறது. அதே நேரம் பாஜக தலைமையிலான அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி வருவதால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். முதல்வர் அவமதிக்கப்பட்டதாக கூறும் விவகாரத்தில் சீமான் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *