திருநெல்வேலி மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக, அறிவிக்க வேண்டும்! மாவட்ட ஆட்சித்தலைவரிடம், முன்னாள் சபாநாயகர் வலியுறுத்தல்
திருநெல்வேலி,செப்டம்பர்.13:- தி.மு.க.வின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் சபாநாயகருமான வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயனை, கொக்கிரகுளத்தில் உள்ள, அவருடைய அலுவலகத்தில், விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகளுடன், நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- " திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய ஆறு அணைகள் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த அணைகள் மூலம், பல்வேறு கால்வாய்கள், குளங்கள் நிரம்பி, அவற்றின் மூலம், கடந்த காலங்களில், செழிப்பான முறையில் விவசாயம் நடைபெற்றுவந்தது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால், அணைகள், குளங்கள் எதுவும் நிரம்பவில்லை. இப்போது பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழையும் பொய்த்து விட்டது. அதன் காரணமாக இம்மாவட்ட அணைகள் எதுவும் நிரம்பாததால், பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு, தேவையான தண்ணீர் கிடைடக்காத அவல நிலை உருவாகியுள்ளது. சில இடங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழைப்பயிர்களும் கருகி வருகின்றன. கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்துவிட்ட நிலையில் விவசாயிகள், வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். நிலத்தடி நீரின் மட்டமும் படுபாதாளத்துக்கு சென்று விட்டதாலும், ஆறுகளில் தண்ணீர் சரியாக வராததாலும், மாவட்டம் முழுவதும் குடிநீரும் சரியாக கிடைப்பதில்லை. எனவே தமிழக முதல்வரின் கவனத்துக்கு இவற்றை கொண்டு சென்று,நமது திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ஆவன செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டடுள்ள விசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்திடவும், ஆவன செய்ய வேண்டும்!"- இவ்வாறு, தமிழக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கிய போது, மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி உட்பட பலர், உடனிருந்தனர்
Comments:
Leave a Reply