Friday, December 27
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடத்திய,  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடத்திய, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில்,

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடத்திய,  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்! 

கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் போட்ட, ஆர்ப்பாட்டக்காரர்கள்! திருநெல்வேலி, அக்.2:- எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான, 

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் சார்பாக,   கோரிக்கை  முழக்க ஆர்ப்பாட்டம், நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட,

மேலப்பாளையம் "சந்தை ரவுண்டானா" அருகில், இன்று (அக்டோபர்.2) மாலையில், நடைபெற்றது.* 44 தொழிலாளர்களின் உரிமை சட்டங்களை, பாதுகாத்திட வேண்டும்! * வேலையில்லா திண்டாட்டத்தை, போர்க்கால  அடிப்படையில் போக்கிட வேண்டும்!*

அத்தியாவாசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும்! *  விதிமீறல் என்னும்  பெயரில், மோட்டர் தொழிலாளர்கள் மீது அபராதம் விதித்திடும் திட்டத்தை, நிபந்தனை எதுவுமின்றி  கை விட வேண்டும்! உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் பாட்சா, தலைமை

வகித்தார்.

மாவட்ட செயலாளர் செய்யது மைதீன், ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளை, தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலாளர் சனா சிந்தா, அனைவரையும் வரவேற்று, பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கல்வத், மாவட்ட இணைச் செயலாளர் "பாளை" அன்சாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் புதுமனை சிந்தா, தங்கள் மைதீன்,காஜா ஆகியோர்,  முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் முகம்மது ஆசாத், "கண்டன உரை" நிகழ்த்தினார். 

சிறப்பு அழைப்பாளர்களாக, தொழிற்சங்க நெல்லை மண்டல தலைவர் ஐதர் இமாம், எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அன்வர் ஷா,மண்டல செயலாளர் ராஜா முகம்மது, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் "குலசை" தாகிர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகளும் கிளை உறுப்பினர்களும், பீடித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும்தொழிலாளர்கள் உட்பட,  திரளானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி, "கோஷம்" போட்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில்,  மாவட்ட பொருளாளர் சுல்தான் பாட்சா, அனைவருக்கும் நன்றி கூறினார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *