தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார நிறைவு விழா!
திருநெல்வேலி அரவிந்த் கண்மருத்துவ மனையில், 38-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார நிறைவு விழா! கண்தானம் வழங்கிய குடும்பத்தினர், கவுரவிக்கப்பட்டனர்!
திருநெல்வேலி, செப்டம்பர்.8:- திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி அரவிந்த் கண்வங்கி ஆகியன இணைந்து நடத்திய, 38-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார நிறைவு விழா, நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள, அரவிந்த் கண் மருத்துவமனை கலையரங்கில், நடைபெற்றது. உதவி ஆட்சியர் (பயிற்சி) சி. கிஷன் குமார்
தலைமை வகித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை ஆலோசகர் டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்று, பேசினார். திருநெல்வேலி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்து நிபுணர் டாக்டர். வி.ராமலட்சுமி, திருநெல்வேலி இந்திய மருத்துவக் கழக தலைவர் டாக்டர். என்.சுப்பிரமணியன், ரோட்டரி கிளப் மாவட்ட பொதுச் செயலாளர் ஆ.ஆறுமுகபெருமாள், அரிமா மாவட்ட ஆளுநர் டாக்டர் டி. பிரான்சிஸ் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கண் தான விழிப்புணர்வு குறும்படமான "'கர்ணன்" வெளியீட்டு நிகழ்ச்சியும், இவ்விழாவுடன் நடைபெற்றது. கண் தானம் செய்த குடும்பத்தினர், கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும், "கதர் ஆடைகள்" அணிவிக்கப்பட்டது. கண் தானம் பெற உதவி செய்த, சிவகாசி "பிரைட் விஷன் சாரிடபிள் டிரஸ்ட்" டாக்டர் ஜெ.கணேஷ், சிவகாசி அரிமா சங்க நிர்வாகி முருகேச பாண்டியன், பாவூர்சத்திரம் அரிமா சங்க நிர்வாகி கே.ஆர்.பி. இளங்கோ, கோவில்பட்டி கண்தான இயக்கம் ஜி.ஜெயராஜ், அண்ணாமலையார் பக்தர் குழு ஆர். அய்யப்பன், சிறப்பாக விழிப்புணர்வு பணிபுரிந்த கவிஞர்.கோ கணபதி சுப்பிரமணியன், கவிஞர் சு.முத்துசாமி, குறும்பட இயக்குனர் கே. எஸ்.முத்தமிழ் ஒளிப்பதிவாளர்
எஸ்.செந்தமிழ் ஆகியோர், பாராட்டி சிறப்பு செய்யப்பட்டனர்.பள்ளி மாணவ மாணவியருக்காக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில், "வெற்றி" பெற்றவர்களுக்கு, "பரிசுகள்" வழங்கப்பட்டன. நிகழ்வில்,கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி,ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன், கண் வங்கி பொறுப்பாளர் சாரதா உட்பட பலர், கலந்து கொண்டனர். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஆர்.மீனாட்சி நன்றி கூறினார். அரவிந்த் கண் மருத்துவமனை மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் ஆர்.லட்சுமி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
Tags:
Comments:
Leave a Reply