Thursday, January 23
Breaking News:
Breaking News:
மத்திய பா.ஜ.க.அரசு பதவி விலகக்கோரி, திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

மத்திய பா.ஜ.க.அரசு பதவி விலகக்கோரி, திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

மத்திய பா.ஜ.க.அரசு பதவி விலகக்கோரி, திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்! நூற்றுக் கணக்கானக்கானோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்! திருநெல்வேலி, செப்டம்பர்.13:- * நாடு முழுவதிலும் அதிகரித்துள்ள வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்! * பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விற்பதை, உடனடியாக கைவிட வேண்டும்! * வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் போக்கையும், தமிழைப்பழிக்கும் போக்கையும் நிறுத்த வேண்டும்! * விலைவாசி உயர்வுக்கு முழுகாரணமான மத்திய அரசு, காலதாமதமின்றி பதவி விலக வேண்டும்!- உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, திருநெல்வேலியில் கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பராசக்தி பில்டிங் முன்பாக நடைபெற்ற,  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியுசி மாநில தலைவர் காசி விசுவநாதன் தலைமை லகித்தார்,  மாவட்ட துணை செயலாளர் முத்துக்கிருஷ்னன், நாங்குநேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.கிருஷ்ணன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.கட்சியின் மாவட்ட செயலாளர் செ.லட்சுமணன், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் முருகேசன், ஏஐடியுசி ரெங்கன்,  சடையப்பன் உட்பட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம். போட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையப்பகுதியில்,  சுமார் அரைமணி நேரத்திற்கு,  போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *