Monday, December 23
Breaking News:
Breaking News:
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் அ.தி.மு.க., உறுப்பினர்கள் 8 பேர் வெற்றி

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் அ.தி.மு.க., உறுப்பினர்கள் 8 பேர் வெற்றி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 8 திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில், அனைத்து உறுப்பினர் பதிவிகளிலும், அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர்.மாநில தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட திட்டக்குழுவிற்கு, மாவட்ட பஞ்.,க்குட்பட்ட ஊரக பகுதியில் இருந்து, 8 உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் டவுன் பஞ்., பகுதிகளை உள்ளடக்கிய நகர்ப்புற பகுதியில் இருந்து, 4 உறுப்பினர்கள் என, மொத்தம், 12 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு, கடந்த, 7 முதல், 10 வரை நடந்தது.இதில், நகர்ப்புற பகுதிக்கு தேர்வு செய்ய வேண்டிய, 4 உறுப்பினர்களுக்காக, 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஒரு வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது. அதையடுத்து, சீராப்பள்ளி டவுன் பஞ்., உறுப்பினர் செல்வராஜூ, ப.வேலுார் டவுன் பஞ்., உறுப்பினர் ராமசாமி, நாமக்கல் நகராட்சி கவுன்சிலர் பூபதி, திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர் மனோன்மணி ஆகியோர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.ஊரக பகுதிக்கு தேர்வு செய்ய வேண்டிய, 8 உறுப்பினர்களுக்காக, 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட பஞ்., அலுவலகத்தில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செந்தில், கனகா, சுகிர்தா, செல்லப்பன், இன்பத்தமிழரசி, தவமணி, ருத்ராதேவி, கூட்டணி கட்சியான பா.ம.க., வடிவேல் ஆகியோர் வெற்றிபெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.,வை சேர்ந்த, 8 பேரும் தோல்வியடைந்தனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *