ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா கோலாகலம்
ராகவேந்திரா சுவாமிகளின், 352-ம் ஆண்டு ஆராதனை விழா, ராகவேந்திரா பிருந்தாவனத்தின் 29ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா யோக பிரவேசத்தின், 10ம் ஆண்டு விழா ஆகியவை சேர்ந்த முப்பெரும் விழா, நேற்று கருங்குழியில் நடந்தது.
இங்கு, மாதம் ஒரு முறை பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை நடைபெறும்.
நடந்த முப்பெரும் விழாவில், மேல்மருவத்துார் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவனர் கோ.ப.அன்பழகன் மற்றும் தமிழ்மாறன்,
திருக்கச்சூர் ஆறுமுகம் முன்னிலையில், தமிழ் பேராசிரியர் சுப்ரமணியன் எழுதிய 'யோகி ரகோத்தமா - ஒரு மகானின் வரலாறு' புத்தகம் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஞானலிங்கத்திற்கும், மூல பிருந்தாவனத்திற்கும், வீர ஆஞ்சநேயருக்கும் அபிேஷக ஆராதனைகள் சிறப்பாக நடந்தன. அதன் பின், மஹா மங்கள தீப ஆராதனை, சித்தர் கரங்களால் ஏற்றப்பட்டு, பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட, பல்வேறு பகுதியில் இருந்து, 3,000 மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
Tags:
Comments:
Leave a Reply