Wednesday, December 25
Breaking News:
Breaking News:
அரசு பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவி சத்யா குப்புசாமி தலைமையில்,தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அரசு பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவி சத்யா குப்புசாமி தலைமையில்,தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம்

காரணைப் பெரிச்சானூரில்

21.09.2023 அன்று காலை ஏ.ஆர்.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி  தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவி திருமதி. சத்யா குப்புசாமி அவர்கள் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு வெ.தரணிதரன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் திரு. அங்கமுத்து அவர்கள் காரணை பெரிச்சானூர் ஊராட்சியின் கிளைக் கழக செயலாளர்கள் திரு. ஏழுமலை அவர்கள், திரு. எல்லப்பன் அவர்கள் ஆகியோர் முன்னிலை ஏற்று விழாவை சிறப்பாக நடத்தினர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி ரா.சுதா அவர்கள் உடன் இருந்தார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வெ.சுரேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழாவின் முடிவில் +2 பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாத மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளியின் முதுகலை ஆசிரியர் முனைவர். பா. இளையராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *