Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர் ஆவின் பாலகம் உள்ளிட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் பறிமுதல்

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர் ஆவின் பாலகம் உள்ளிட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் பறிமுதல்

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதையில் பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக வாடகைதாரர்கள் வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மார்ட்டின், வருவாய் ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த டீ பாய், தள்ளுவண்டி, பேக்கரி கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த டேபிள்கள், உணவுப் பொருட்கள், பூக்கடை பொருட்கள் என பல்வேறு இடங்களில் ஆக்கிரமப்புகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். 


ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுவதாக வாடகைதாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போது வாடகைதாரர்கள் அவசர அவசரமாக நடைபாதையில் வைத்திருந்த பொருட்களை உள்ளே எடுத்துச் சென்றனர். கரூர் நகர காவல் துறை பாதுகாப்புடன் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது பரபரப்பு நிலவியது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *