Wednesday, January 22
Breaking News:
Breaking News:
ஆதிபராசக்தி குழும பள்ளி விளையாட்டு தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவன் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆதிபராசக்தி குழும பள்ளி விளையாட்டு தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவன் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.


இதில்  சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் வனப்பகுதி  சாரக அலுவலர் சதீஷ் கலந்து கொண்டு இயற்கை பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, விளையாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசிவிட்டு ஓட்டப்பந்தயம், கோகோ, கூடைப்பந்து, கைப்பந்து, உள்ளிட்ட விளையாட்டுகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் பரிசுகள் வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து  மாணவிகளின் நாட்டியம், குழு நடனம், 

என்சிசி, என் எஸ் எஸ், மாணவர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட வண்ணமயமான கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி குழும பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியாக ஆதிபராசக்தி அன்னை இல்ல தலைமையாசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *