Wednesday, January 22
Breaking News:
Breaking News:
இல்லம் தேடி கல்வி   மைய அரசு பள்ளி மாணவர்களுக்கு அல்டியஸ் பவுண்டேஷன் கணினி உபகரங்கள் வழங்கல்.

இல்லம் தேடி கல்வி மைய அரசு பள்ளி மாணவர்களுக்கு அல்டியஸ் பவுண்டேஷன் கணினி உபகரங்கள் வழங்கல்.

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு அல்டியஸ் பவுண்டேஷன் (Altius Foundation) என்கிற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் முதல் கட்டமாக எட்டு இல்லம் தேடி கல்வி   மையங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி உபகரணங்களை அல்டியஸ் பவுண்டேஷன்  என்ற தனியார் தொண்டு அமைப்பு நிர்வாகம் சார்பாக விக்கிரவாண்டி வட்டார வள மையத்தில் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் அல்டியஸ் பவுண்டேஷன் இயக்குனர் திரு. கிருத்திக் வாசன்,NGO திரு. மகேஷ் குமார்,

விக்கிரவாண்டி வட்டாரக்கல்வி அலுவலர்கள், திரு.ஜெய்சங்கர், திருமதி.கவிதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி.உமாதேவி, இல்லம் தேடிக் கல்வித்திட்ட மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், திரு.தமிழழகன்,

இல்லம் தேடிக் கல்வித்திட்ட விக்கிரவாண்டி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்  திரு.கமலக்கண்ணன், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டு

தன்னார்வலர்களுக்கு கணினி உபகரணங்களை வழங்கினார்கள்.


கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள எட்டு பள்ளிகளின் விபரங்கள் பின்வருமாறு,


1. ஊ.ஒ தொடக்கப்பள்ளி, சாமியாடி குச்சிப்பாளையம்,


2.ஊ.ஒ தொடக்கப்பள்ளி, பனையபுரம்,


3.ஊ.ஒ தொடக்கப்பள்ளி, எசாலம்,


4.ஊ.ஒ நடுநிலைப்பள்ளி, ஒரத்தூர்,


5.ஊ.ஒ நடுநிலைப்பள்ளி, வாக்கூர்,


6.ஊ.ஒ நடுநிலைப்பள்ளி, முட்டத்தூர்,


7.ஊ.ஒ நடுநிலைப்பள்ளி, ஈச்சங்குப்பம்,


8.ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளி,

ஆவுடையார்பட்டு உள்ளிட்ட எட்டு அரசு பள்ளிகளுக்கு அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி உபகரணங்களை அல்டியஸ் பவுண்டேஷன்  என்ற தனியார் தொண்டு அமைப்பு நிர்வாகத்தால்  வழங்கப்பட்டது.


சாமானிய ஏழை வீட்டு குழந்தைகள் கல்வி பயின்று வரும் அரசு பள்ளிகளுக்கு மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி கணினி உபகரணங்களை வழங்கிய அல்டியஸ் பவுண்டேஷன் தொண்டு அமைப்பினருக்கு பள்ளி மாணவர்கள் பள்ளியின் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது பாராட்டு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *