Monday, December 23
Breaking News:
Breaking News:
ஈரோடு நவரசம் கலை அறிவியல் கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கவிழா

ஈரோடு நவரசம் கலை அறிவியல் கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கவிழா

ஈரோடு 

அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

கல்லூரியின் பொருளாளர் சி.பழனிசாமி வாழ்த்தி பேசினார், காங்கேயம் சேனாதிபதி பாரம்பரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கல்லூரியின் செய்தி மடல் வெளியிட்டு, கல்லூரி இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார் .

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதற்பரிசு பெற்ற மாணவி யோகலட்சுமிக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில்வெற்றி பெற்ற மாணவி நந்தினிதேவிக்கும் பரிசு  தெரிவிக்கப்பட்டது. கல்லூரியின் துணைத் தலைவர்கள் பழனிசாமி. கோபால், துணைப்பொருளாளர் செல்வராஜ்,  நவரசம் அகாடமி செயலாளர் கார்த்தி, பொன்னுவேல் கல்லூரி தாளாளர் கமிட்டி பள்ளியின் அருண்கார்த்திக், பொருளாளர் உறுப்பினர்கள் மதியரசு. சிவசுப்பிரமணி. அமிர்தநாதன், பெரியசாமி. கார்த்திகேயன், நாச்சிமுத்து, சின்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கல்லூரிப் பேரவை மாணவிகளுக்கு பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவிகளின் பண்பாட்டு நடனமும் நடந்தது.கல்லூரி முதல்வர் செல்வம் நன்றியுரை வழங்கினார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *