Thursday, November 21
Breaking News:
Breaking News:
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் அரசுக்கு பணம் மிச்சமாகும்; ராமதாஸ் பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் அரசுக்கு பணம் மிச்சமாகும்; ராமதாஸ் பேட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு ராமதாஸ் தலைமையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கர்நாடகா அரசு தற்போது தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம். சமூக நீதிதான் எல்லாவற்றிற்கும் சரியான பரிகாரம்வருகிற  நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து எங்களுடைய கட்சியின்  செயற்குழு பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு தமிழக காவல்துறை பல்வேறு  முயற்சிகளை எடுத்து வருகிறது. நம் நாட்டிற்கு தற்போது உள்ள இந்தியா பெயரே போதும் என தெரிவித்தார்.ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் அரசுக்கு செலவாகும் பணம் மிச்சமாகும். கடந்த 1967ம் ஆண்டு வரை சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. தற்போது அது மீண்டும் நடைமுறைக்கு வந்தால் நான் அதை வரவேற்பேன் என்றார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *